“அறிவு கெட்டவனே… உன்னை அடிச்சு மூளையை சரி பண்ணிடுவேன்…” மிரட்டிய பெண் அதிகாரி…! ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற இடத்தில் மோதல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில், ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற ரஞ்சனா சிங் என்ற பெண் வருவாய்த்துறை அதிகாரி, அங்கிருந்த கிராமவாசி ஒருவரைப் பார்த்து, “உனக்கு மூளையே இல்லை… உன்னை அடித்து மூளையைச் சரி செய்துவிடுவேன்” என்று கடுமையான சொற்களால் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சந்தோலி பகுதியில் உள்ள பொதுப்பாதை மற்றும் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில், மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஆய்வு நடத்தச் சென்றபோதே இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சுகிரீவ் என்ற கிராமவாசி, உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று, பெண் அதிகாரி மீது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தவறாக நடந்துகொண்டதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் முறைப்படி புகாரளித்துள்ளார்.

அதேவேளையில், இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள பெண் லேக்பால் ரஞ்சனா சிங், “தான் அரசுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்து, முதலில் அந்த நபர்தான் தன்னிடம் அவமரியாதையாக நடந்துகொண்டார் என்றும், வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் தவறாகச் சித்தரித்து இணையத்தில் பரப்பி வருகின்றனர்” என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Devi Ramu

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

7 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

8 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

8 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

8 மணத்தியாலங்கள் ago