“பஸ்ஸ நிப்பாட்ட மாட்டியா..?” பேருந்தை நிறுத்தாததால் ஆத்திரம் சுத்தியலை எடுத்து ஜன்னல் கண்ணாடியை உடைத்து நொறுக்கிய பெண் பயணி… கேரளாவில் பகீர்..!!

By Soundarya on வைகாசி 18, 2026

Spread the love

கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் மாங்காவு பகுதியில் அரசு விரைவு பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர், அங்குள்ள தனியார் மருத்துவமனை மற்றும் மாங்காவு அருகே உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு பேருந்தை நிறுத்துமாறு நடத்துநரிடம் கேட்டுள்ளார். ஆனால், அந்தப் பேருந்து ஒரு அதிவேக பிரீமியம் (KSRTC Superfast Premium) பேருந்து என்பதால், குறிப்பிட்ட அந்த இடங்களில் அதற்கு அதிகாரப்பூர்வ பேருந்து நிறுத்தம் இல்லை. இதனால், விதிமுறைகளின்படி அங்கு பேருந்தை நிறுத்த நடத்துநரும் ஓட்டுநரும் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்தப் பெண், ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவர்களைத் தனது மொபைல் போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினார். வாக்குவாதம் முற்றிய நிலையில், பேருந்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த அவசரகாலக் கண்ணாடி உடைக்கும் சுத்தியலை (Emergency Hammer) எடுத்து, ஓட்டுநர் இருக்கைக்கு அருகே இருந்த முன்பக்கக் கதவின் ஜன்னல் கண்ணாடியை கொடூரமாக அடித்து உடைத்தார். இதையடுத்து, பேருந்து ஊழியர்கள் வாகனத்தை நேராக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர். பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்ததற்காக அந்தப் பெண்ணுக்கு ₹25,000 அபராதம் விதிக்கப்பட்டு, பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.