யோவ்… யாருகிட்ட உன் வேலையைக் காட்டுற?… KSRTC பேருந்தில் சில்மிஷம் செய்த நபரை வெளுத்து வாங்கிய பெண்… காலில் விழுந்து கதறிவிட்டு… ஓடும் பேருந்தில் இருந்து குதித்த நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!

By Swetha on ஆவணி 14, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து பங்கார்பேட்டை நோக்கிச் சென்ற அரசுப் போக்குவரத்துக் கழகச் பேருந்தில், பெண் பயணி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற நபரை அப்பெண் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் அப்பெண்ணின் அருகில் அமர்ந்திருந்த நபர், அவரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் பொறுமை காத்துப் பார்த்த அப்பெண், அந்நபரின் சில்மிஷம் தொடரவே ஆத்திரமடைந்து எழுந்து அவரைப் பேருந்திலேயே வைத்து அடித்தார். இதைப் பார்த்த சக பயணிகளும் அப்பெண்ணிற்கு ஆதரவாக அந்த நபரைத் தட்டிக் கேட்டுத் தாக்கினர். நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட அந்த நபர், உடனடியாக அப்பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிட்டு, ஓடும் பேருந்தில் இருந்தே கீழே இறங்கித் தப்பிச் சென்றுள்ளார்.

   

https://x.com/path2shah/status/2087964471377658085/video/1

   

இந்தப் பரபரப்பான காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை காவல் துறையில் எந்தவொரு அதிகாரப்பூர்வப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.