ஸ்பெயின் நாட்டில், அலுவலக நேரத்திற்கு முன்பாகவே பணிக்கு வந்ததற்காகப் பெண் பணியாளர் ஒருவர் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொதுவாகத் தாமதமாக வருபவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படும், ஆனால் இந்தச் சம்பவம் அதற்கு நேர்மாறாக அமைந்துள்ளது. அந்தப் பெண் பணியாளர், அலுவலகம் தொடங்கும் நேரத்திற்குச் சுமார் 40 நிமிடங்கள் முன்னதாகவே தொடர்ந்து வந்துள்ளார். இவ்வாறு முன்கூட்டியே வந்து வேலை செய்யத் தொடங்குவது நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது என நிர்வாகம் கருதியது.
பலமுறை மேலாளர்கள் எச்சரித்த பிறகும், அவர் தனது வழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. குறைந்தது 19 முறை அவர் இதேபோல் முன்கூட்டியே வந்துள்ளார். இது அலுவலகத்தின் நேர மேலாண்மை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறும் செயல் என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் ‘வேலை-வாழ்க்கை சமநிலை’ (Work-Life Balance) மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாக வேலை செய்வது அல்லது கூடுதல் ஊதியம் இன்றி வேலை செய்வது சட்ட சிக்கல்களை உருவாக்கலாம் என்பதால், மேலாளர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்
