கான் யூனிஸ் நகரின் மவாசி பகுதியில் உள்ள ஒரு தற்காலிக முகாமில் தங்கியிருந்த இடம்பெயர்ந்த பாலஸ்தீனியக் குடும்பத்தைச் சேர்ந்த ரஹாஃப் அபு ஜசார் என்ற 8 மாதக் குழந்தை, கடுமையான குளிரால் ஏற்பட்ட தாழ்வெப்பநிலை காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குடும்பம் தங்கியிருந்த கூடாரம் மிகவும் மெல்லியதாகவும், தேய்ந்துபோன நிலையிலும் இருந்துள்ளது. போதிய போர்வைகள், குளிர்காயும் வசதிகள் இல்லாததாலும், மழைநீர் கூடாரத் துணி வழியாக உள்ளே கசிந்ததாலும், தெற்குப் பகுதியில் வீசிய கடுமையான குளிரிலிருந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.
🚨BREAKING | R8-months-old Palestinian infant Rahaf Abu Jazar died overnight due to hypothermia inside the thin, worn tent where her displaced family has been sheltering in the Mawasi area of Khan Younis. With no insulation, no heating, and rainwater seeping through the fabric,… pic.twitter.com/aYzqIoCLNP
— Translating Falasteen (Palestine) (@translatingpal) December 11, 2025
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் விதிக்கப்பட்டுள்ள அதே ஆபத்தான மற்றும் கொடிய நிலைமைகளுக்கு, காயமடைந்தவர்கள் உட்பட லட்சக்கணக்கான இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் ஆளாகியுள்ளனர் என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. மனிதாபிமானமற்ற இந்தச் சூழல், காசா பகுதியில் உள்ள அகதிகளின் அவல நிலையை உணர்த்துகிறது.
