ஹரியானா மாநிலம் குர்கிராமின் முக்கியச் சாலையான கோல்ஃப் கோர்ஸ் ரோட்டில், ‘சியா’ என்ற பெண் பைக் ரைடர் தனது நண்பர்களுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரையொட்டிப் பின் தொடர்ந்து வந்த ஒரு காரில் இருந்தவர்கள், சியாவின் பைக்கை நெருங்கி இடையூறு செய்துள்ளனர்.
இதையடுத்து காரில் வந்தவர்களிடம் பாதுகாப்பான இடைவெளியைப் பராமரித்து வாகனத்தை இயக்குமாறு சியா கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், காரில் இருந்த போதை கும்பல் அவரைக் மிரட்டியதுடன், அவர் முன்னோக்கிச் செல்ல முயன்றபோது காரை வேகப்படுத்திச் சென்று சியாவின் பைக் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் சியா பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டார். அவரது பைக் சில மீட்டர்கள் இழுத்துச் செல்லப்பட்டது.
உடனடியாகச் சியாவின் நண்பர்கள் அந்த காரைத் துரத்திச் சென்று அடுத்த சிக்னலில் மடக்கியபோதிலும், காரை ஓட்டிய நபர் தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் அங்கிருந்து காரை வேகமாக ஓட்டித் தப்பிச் சென்றுள்ளார். இந்த முழுச் சம்பவமும் சியாவின் ஹெல்மெட் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சியா, குர்கிராம் போலிஸார் சம்மந்தப்பட்ட கார் ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண் ரைடர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…
வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…
லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…
திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக்…
தமிழக அரசியல் களம் இடைத்தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மதிமுக மாவட்டச் செயலாளர் ஆற்றிய உரை பெரும் விவாதத்தைக்…
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி, நிகழ்ச்சியின் போட்டியாளர் ஷாதிகாவிடம் 'தலைமைப் பண்பு' குறித்துப் பேசிய கருத்துகள்…