இனி காசு கொடுத்தா தான் போக முடியும்… கப்பல்களுக்கு கட்டணம் போடும் ஈரான்… பின்னணியில் இருக்கும் ரகசியம்… அதிர்ச்சியில் உலக நாடுகள்…!

By SATHISH R on ஆடி 6, 2026

Spread the love

ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லும் வர்த்தக மற்றும் சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு மற்றும் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று சீனாவுக்கான ஈரான் தூதர் அப்தோல்ரெஸா ரஹ்மானி ஃபஸ்லி அதிரடியாக அறிவித்துள்ளார். சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக அமைதி மன்றக் கூட்டத்தில் பேசிய அவர், இந்த புதிய வழித்தட ஏற்பாடுகளுக்காக ஓமனுடன் இணைந்து ஈரான் தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். ஹோர்முஸ் நீரிணை தங்களது பிராந்திய நீர்ப்பரப்பின் ஒரு பகுதியாக இருப்பதால், அங்கு பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவது, பயணங்களைக் கண்காணிப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சேவைகளுக்காக இந்த கட்டணம் கண்டிப்பாக வசூலிக்கப்படும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின்படி, வர்த்தகக் கப்பல்கள் 60 நாட்களுக்கு அந்த நீர்வழிப்பாதையைக் கட்டணமின்றி கடக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த காலக்கெடுவிற்குப் பிறகு என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், ஈரான் தூதரின் இந்த அறிவிப்பு சர்வதேச வர்த்தக வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், இந்த புதிய கட்டண முறையின் கீழ், தங்களின் கடினமான காலகட்டங்களில் துணையாக நின்ற நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் கட்டண விலக்குகள் வழங்கப்படும் என்றும் ஈரான் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.