பிரபல நடிகரான பிரசாந்த் ராதா பாரதி இயக்கத்தில் வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக திரையுலகில் அறிமுகமானார். இவரது தந்தை இயக்குனர் தியாகராஜன். டாப் ஸ்டார் பிரசாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் வின்னர், திருடா திருடா, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். பிரசாந்த் நடிப்பில் விரைவில் அந்தகன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிரசாந்த் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நேற்று பிரசாந்த் தனது 51-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பிரசாந்தின் தந்தை தியாகராஜன் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள BMW X7 சீரிஸ் காரை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். அதனை ஓட்டிக்கொண்டே பிரசாந்த் youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
