ரெட் சிண்ட்ரோம் என்ற அரிதான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் ஆஷ்லி. உடல் மற்றும் மன ரீதியாகக் குழந்தையைப் போலவே இருக்கும் இவருக்கு ஏற்படும் வலிப்பு நோய்களைக் கண்காணிக்க, அவரது தாய் பவுலா விஜில் மகனின் படுக்கையறையில் கேமரா ஒன்றைப் பொருத்தியிருந்தார்.
ஒருநாள் கேமரா பதிவுகளைச் சோதித்துப் பார்த்தபோது, பவுலாவின் கணவரான பிரையன் கென்னத் அர்பன், ஆஷ்லியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாகக் காவல் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பிரையன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவருக்கு 1 முதல் 15 ஆண்டுகள் வரை தண்டனை உறுதி செய்யப்பட்டது. மனதை நொறுக்கும் விதமாக, இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்திலேயே ஆஷ்லி தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
