வறுமையின் கோரப்பிடியில் சிக்கிய ஒரு தந்தை, தன் பெற்ற மகள் என்றும் பாராமல் வெறும் 5,000 ரூபாய்க்காக அவளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தத் துணிந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. “அப்பா, நான் மாதவிடாய் காலத்தில் இருக்கிறேன்” என்று அந்தச் சிறுமி கதறியும், பணத்தாசை பிடித்த அந்தத் தந்தையின் மனம் இரங்கவில்லை. பாரத் ஷெட்டி என்ற நபர் கொடுத்த ஆசை வார்த்தைகளை நம்பி, தன் செல்ல மகளையே அந்தப் பாவியிடம் அந்தத் தந்தை ஒப்படைத்துள்ளார்.
மனிதாபிமானமற்ற முறையில் விலைக்கு வாங்கப்பட்ட அந்தப் பெண்ணை, பாரத் ஷெட்டி மிரட்டிப் பணிய வைத்துள்ளார். அடுத்த இரண்டு நாட்களில், 20 வயது முதல் 45 வயது வரையிலான நான்கு காமப்பேய்கள் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாதவிடாய் கால வலி ஒருபுறம், இந்த மிருகங்களின் சித்திரவதை மறுபுறம் என அந்தப் பெண் நரக வேதனையை அனுபவித்துள்ளார்.
இறுதியில், அசாத்தியத் துணிச்சலுடன் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றத்தில் ஈடுபட்ட பாரத் ஷெட்டி உள்ளிட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் மற்றும் மகளையே விற்ற அந்தத் தந்தையையும் கைது செய்துள்ளனர். ஒரு தந்தை என்பவனே மகளுக்கு எமனாக மாறிய இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
