இப்படி ஒரு கொடூரமான அப்பனா?… மது குடித்துவிட்டு 3 வயது பெண் குழந்தையை தூக்கிச் சென்ற தந்தை… அடுத்து நடந்த பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

திருச்சி அரியமங்கலம் பகுதியில் 3 வயது பெண் குழந்தையை தந்தை மது அருந்துவதற்காக விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற நபர் தன்னுடைய மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேசமயம் வேலை இல்லாததால் மது பழக்கத்திற்கு அடிமையான அவர் தொடர்ந்து மது அருந்து வந்தது மட்டுமல்லாமல் குடும்பத்தில் இருப்பவர்களையும் துன்புறுத்தியுள்ளார். இதனால் நாளுக்கு நாள் குடும்பம் சிதைந்துள்ளது. இதனிடையே சமீபத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு தொடர்ந்து ரவிக்குமார் தன்னுடைய 3 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பிறகு குழந்தையை மீண்டும் கொண்டு வராததால் சந்தேகம் அடைந்த மனைவி இது குறித்து விசாரித்த போது குழந்தையை நண்பரிடம் இருப்பதாக ரவிக்குமார் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பூக்கடை உரிமையாளர் சாகுல் என்பவரிடம் விசாரணை நடத்திய போது குழந்தையை வேறு ஒருவரிடம் தத்து கொடுக்க சொன்னதாகவும் அதன்படி கொடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரவிகுமார் மனைவி போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திருச்சி பாலக்கரையை சேர்ந்த முருகன் மற்றும் சண்முகவள்ளி தம்பதியினர் குழந்தை இல்லாததால் தத்தெடுக்க விருப்பம் தெரிவித்ததாகவும் சாகுல் ரவிக்குமாரின் பெண் குழந்தையை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அந்த தம்பதியினரிடம் தத்து கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

இதில் பதினைந்தாயிரம் ரூபாய் மட்டும் ரவி குமாருக்கு வழங்கப்பட்டதாகவும் மீதம் தினமும் மது குடிக்க பணம் வழங்கியதாகவும் விசாரணையில் வெளிச்சமானது. முருகன் தம்பதியினர் குழந்தையை நன்றாக பராமரித்து வந்திருந்தாலும் சட்ட விரோதமாக தத்து கொடுக்கப்பட்டதால் போலீசார் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து பூக்கடை உரிமையாளர் சாகுல், ரவிக்குமார், முருகன் மற்றும் அவருடைய மனைவி சண்முகவள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Nanthini

Recent Posts

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

3 minutes ago

திடீர் திருப்பம்!… ரூ.21 கோடி நகை கொள்ளை… சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்… போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் டுவிஸ்ட்…!!

மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…

12 minutes ago

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

3 மணத்தியாலங்கள் ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

3 மணத்தியாலங்கள் ago