ஒன்னா ரெண்டா 8 முக்கிய சீர்திருத்தங்கள்… ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு சூப்பர் சலுகை…. அரசு அறிவிப்பு…!

Spread the love

இந்தியாவிலுள்ள குடிமக்களுக்கு உணவு பாதுகாப்பை வழங்கும் பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகளுக்கு மானிய விலையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகிறது. இதனிடையே பொது விநியோகத் திட்டத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில் மத்திய அரசு 8 முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் இந்தியா முழுவதும் அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் மானிய விலை உணவுப்பொருட்களின் மாதாந்திர ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் அரிசி, கோதுமை மற்றும் பருப்பு வகைகள் இனி கூடுதல் அளவில் விநியோகிக்கப்படும்.

அடுத்து பொதுமக்கள் தங்களுக்கு விருப்பம் இருந்தால் நியாய விலை கடைகளில் உணவுப் பொருட்களை பெறுவதற்கு பதில் அதற்கான மானிய தொகையை நேரடியாக தங்களுடைய வங்கி கணக்கில் பெரும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் பயனாளிகள் தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வெளி சந்தைகள் அல்லது அரசு அங்கீகரித்த பிற கடைகளில் வாங்கிக் கொள்ள முடியும்.

பொது விநியோகத் திட்டம் கிராமப்புறங்களை பெரும்பாலும் மையமாகக் கொண்டிருந்த நிலையில் இனி நகர்புறங்களில் உள்ள சேரி பகுதிகள் மற்றும் முறைச்சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழைக் குடும்பங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர் கொள்ளக்கூடிய முக்கிய பிரச்சனையை தீர்ப்பதற்காக போர்ட்டபிள் ரேஷன் கார்டு வசதி முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் எந்த மாநிலத்திலும் புவியியல் எல்லைகளைக் கடந்து தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இனி ஸ்மார்ட்போன்களிலேயே பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் ரேஷன் கார்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலமாக பயனாளிகள் தங்களுடைய ஒதுக்கீடு, முந்தைய பரிவர்த்தனை போன்ற விவரங்களை மொபைல் செயலி மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற சேவைகளை பெற மக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய தேவையை நீக்கும் நோக்கத்தில் ஒரு புதிய ஆன்லைன் போர்டல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக வீட்டில் இருந்தபடியே அனைத்து சேவைகளையும் பெற முடியும்.

கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போன்ற எளிதில் பாதிக்கக்கூடிய பிரிவினருக்கு வழக்கமான உணவுப் பொருட்களுடன் சரி ஊட்டப்பட்ட தானியங்கள் மற்றும் கூடுதல் ஊட்டச்சத்து சப்லிமென்ட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

6 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

7 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

9 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

9 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

10 மணத்தியாலங்கள் ago