கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் விஜய்க்கு எதிராக பல ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே விஜய் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் அதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கரூரைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களிடம் விஜய் தொலைபேசி மூலம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பது குறித்த கருத்துக்களை அவர் கேட்டறிந்துள்ளார். மேலும் பிரச்சினைகள் அனைத்தும் சரியாகிவிடும் என நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்த அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவவும் சர்ச்சையான பதிவுகளை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…