சிறுக சிறுக சேர்த்த பணம்… மகளின் கனவை நிறைவேற்ற சாக்கு பையில் நாணயங்களை அள்ளிச் சென்ற தந்தை… நெகிழ வைக்கும் சம்பவம்…!

Spread the love

சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தை ஒருவர் தன்னுடைய மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நாணயங்களை சேர்த்து ஸ்கூட்டர் வாங்கி கொடுத்த சம்பவம் காண்போரை நெகிழ வைத்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு இருசக்கர வாகன ஷோரூமில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த பஜ்ரம் ராம் என்பவருடைய மகள் சம்பா பகத் என்பவர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டரை வாங்க ஆசை பட்டுள்ளார். ஏழை விவசாயியான ராம் தன்னுடைய மகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் ஒரு தகர பெட்டியில் நாணயங்களை சேர்த்து வைத்துள்ளார்.

சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக தன்னால் முடிந்த அனைத்தையும் சேமித்து நாணயங்களை ஒரு சாக்கு பையில் போட்டு ஹோண்டா ஷோரூம்க்கு எடுத்துச் சென்றுள்ளார். அதனைப் பார்த்த ஊழியர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் நாணயங்கள் நிறைந்த பைக்கு பின்னால் இருக்கக்கூடிய கதையை கேட்டு அனைவருமே ஆச்சரியத்தில் பிரம்மிப்பாக பார்த்தனர். இதனைக் கண்ட ஷோ ரூம் இயக்குனர் நெகிழ்ச்சி அடைந்து, இது பணத்தைப் பற்றியது அல்ல, ஒரு கடின உழைப்புக்கு மரியாதை அளிப்பது பற்றியது, அர்ப்பணிப்பை கொண்ட ஒருவருக்கு சேவை செய்வது மரியாதை என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாணயங்கள் எண்ணப்பட்ட நிலையில் 40 ஆயிரம் ரூபாய்க்கு நாணயங்கள் இருந்ததால் மீதமுள்ள தொகைக்கு கடன் பெறலாம் என்று அந்த விவசாயி கூறியுள்ளார். ஆவணங்கள் முடிந்ததும் அவருடைய மகளிடம் புதிய ஹோண்டா ஆக்டிவாவின் சாவி ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு இது என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள் என்று விவசாயியின் மகள் கூறிய நிலையில் இந்த சம்பவம் அங்கிருந்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது

Nanthini

Recent Posts

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

1 second ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

4 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

13 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

39 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

46 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

59 minutes ago