“அப்பா… சாப்பாடு பிடிக்கல…” மகள் சொன்னதுமே வேலையை ராஜினாமா செய்த தந்தை…. அடுத்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 14, 2025

Spread the love

சீனாவின் ஜிலின் நார்மல் பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு படிக்கும் லி பிங்டி விடுதி உணவு சுவையில்லை என தந்தையிடம் புலம்பினார். தாயை ரத்த புற்றுநோயால் இழந்த பிறகு தந்தை செல்லமாக வளர்த்தார். மகள் கஷ்டப்படக் கூடாது என தியான்ஜினில் இருந்த பார்பிக்யூ வேலையை விட்டு, 900 கி.மீ. தொலைவில் உள்ள பல்கலைக்கழகம் அருகே ஹோட்டல் திறந்தார். கடந்த மாதம் வாடகை அறை எடுத்து ஃபிரைட் ரைஸ், நூடில்ஸ் விற்கத் தொடங்கினார். முதலில் வியாபாரம் சரியில்லை. முதல் நாள் 7 பேர் மட்டும் வந்தனர்.

லி பிங்டி டியூஷன் எடுத்து 70 யுவான் சம்பாதித்து உதவினார். தந்தை கஷ்டப்படுவதைப் பார்த்து சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டு, தந்தையின் தியாகத்தைப் பகிர்ந்து அறிவுரை கேட்டார். போஸ்ட் வைரலாகி மாணவர்கள், ஆசிரியர்கள் கடைக்கு வந்து கூட்டம் அலைமோதியது. இப்போது விற்பனை பெருகியது. லி பிங்டி கூறுகையில், தாய் இறந்த பின் தந்தையுடன் அன்பு பெருகியது. படிப்புக்காக பிரிந்தாலும் தந்தை உடன் இருப்பேன் என்று கூறினார். அதை இப்போது நிரூபித்து விட்டார். லாபம் வேண்டாம், ஒன்றாக இருந்தால் போதும் என்றார். இச்சம்பவம் சீனாவில் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.