மலைக்கா அரோரா பாலிவுட் நடிகை, மாடல், நடன கலைஞர், விஜே மற்றும் இந்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார். அவரது தாயார் ஜாய்ஸ் ஒரு மலையாளி கிறிஸ்தவர். இவரது சகோதரி அமிர்தா மற்றும் இவரது தந்தை அனில் அரோரா இந்திய எல்லை நகரமான பாலிசிகாவே சேர்ந்த இந்து பஞ்சாபி ஆவார். இவர் இந்திய வணிக கடற்படையில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நடிகையும் மாடலுமான மலைக்கா அரோரா அவரது பெற்றோருடன் பாத்ரா மேற்கு பகுதியில் உள்ள ஆயிஷா மேனலில் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது தந்தை அணில் அரோரா இன்று காலை 9 மணி அளவில் தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி பாலிவுட் திரையுலகை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
அணில் அரோராவின் உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றார்கள். இவருடைய உடல் பாபா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தற்போது வரை வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
மலைக்கா அரோரா பாலிவுட் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். பிறகு மலைக்கா அரோரா அர்ஜுன் கபூருடன் உறவில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இவரது தந்தை தற்கொலை செய்துவிட்டார் என்ற செய்தி தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.