அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பக்காய் பாலைவனப் பகுதியில் நிலத்தடி நீர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த 24 வயது இளம் புவியியலாளர் டேனியல் ராபின்சன், கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று தனது ஜீப் வாகனத்தில் பாலைவனத்தை நோக்கிச் சென்றவர் மாயமானார். அவர் மாயமான சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜூலை 19 அன்று, பணி தளத்திலிருந்து 4 மைல் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில் அவரது ஜீப் வாகனம் பக்கவாட்டில் கவிழ்ந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரின் ஏர்பேக்குகள் வெளிப்பட்டிருந்த நிலையில், டேனியலின் கைப்பேசி, பணப்பை, சாவி மற்றும் அவர் அன்று அணிந்திருந்த ஆடைகள் கூட காரில் இருந்தன. ஆனால் டேனியல் எங்கே போனார் என்பது விடை தெரியாத புதிராக உள்ளது. போலிஸார் இச்சம்பவத்தில் சதித்திட்டம் எதுவுமில்லை எனக் கூறிய போதிலும், அவரது தந்தை தனியார் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்தபோது, காரின் இன்ஜின் விபத்துக்குப் பிறகும் 40 முறைக்கு மேல் ஸ்டார்ட் செய்யப்பட்டுள்ளதும், விபத்து நடந்த விதம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதும் தெரியவந்தது. கடந்த 5 ஆண்டுகளாகத் தனது மகனைத் தேடி அந்த தந்தை பாலைவனத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்.
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…
ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…
கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…
பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…
ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…