“வாங்க மாமா காட்டறேன்!”… சொந்த மகனாலேயே வசமாக சிக்கிய தந்தை… போலீசாரையே வியப்பில் ஆழ்த்திய 6 வயது சிறுவனின் மாஸ் ட்விஸ்ட்…!!

By Gayathri on ஆவணி 21, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுரேஷ் என்பவர் தன்னிடம் வண்டிக்கான ஆவணங்கள் இல்லை என நினைத்து அச்சமடைந்து, தனது பைக்கை யாருக்கும் தெரியாமல் பக்கத்து தெருவில் மறைத்து வைத்தார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது 6 வயது மகன் மகேந்திரா, வெகுளித்தனமாக நேராக போலீசாரிடம் சென்று, அவர்களைக் கண்டதும் தன் தந்தை பைக்கை ஒளித்து வைத்துவிட்டதாகக் கூறி அவர்களையே அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

சிறுவன் காட்டிய இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பைக்கை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வண்டிக்கான அனைத்து ஆவணங்களும் சரியாகவே இருந்தன. இதையடுத்து, சிறுவனின் கள்ளமில்லாத குறும்பையும் நேர்மையையும் அதிகாரிகள் மனதாரப் பாராட்டினர். தன் அப்பாவையே போலீசாரிடம் சிறுவன் மாட்டிவிட்ட இந்த சுவாரஸ்யமான நிகழ்வு அங்கிருந்தவர்களை வெகுவாகச் சிரிக்க வைத்தது மட்டுமின்றி, இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.