“மனைவி மீது சந்தேகம்…!” 5 நட்சத்திர விடுதியில் 2 மகள்களைக் கொன்ற தந்தை… வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலம்… நடுங்க வைக்கும் சம்பவம்…!!

By Gayathri on ஆவணி 11, 2026

Spread the love

பெங்களூரு நாகவாரா பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய இம்ரான் என்பவர், அங்குள்ள ஒரு ஐந்து நட்சத்திர சொகுசு விடுதியில் தனது இரண்டு மகள்களுடன் தங்கியிருந்தார். இந்நிலையில், அவரது அறையைச் சோதனையிட்ட விடுதி ஊழியர்கள், குழந்தைகள் இருவரும் கட்டிலில் மூச்சு முட்டி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதே அறையின் கழிப்பறையில் கழுத்து அறுபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இம்ரானை மீட்ட ஊழியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனது மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாகவும், அத்தகைய குணமுடைய தாயின் வளர்ப்பில் தனது குழந்தைகள் வாழக் கூடாது என்றும் இம்ரான் கருதியதே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே அவர் பிஞ்சுக் குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தானும் கத்தியால் கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றதாகக் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், அவர் கூறும் தகவல்கள் உண்மையா என்ற கோணத்தில் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.