“தினமும் எவன் கூட டி வீடியோ கால் பேசுற”… மனைவியை கொன்று விட்டு கணவன் செய்த அந்த சம்பவம்… அதிர வைக்கும் பின்னணி…!

By Nanthini on சித்திரை 24, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் குருகிராமில் சந்தேகத்தினால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடன்புரி பகுதியைச் சேர்ந்த தீபக் குமார் மற்றும் சோனம் ஆகிய இருவரும் கல்லூரிக் கால நண்பர்களாக இருந்து, பின்னர் காதலித்து கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், சோனம் தனியார் நிறுவனத்திலும், தீபக் கார் ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தனர்.

ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில், தீபக்கின் மதுப்பழக்கம் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. சோனம் தனது கடின உழைப்பால் பணி உயர்வு பெற்று, கணவருக்குச் சொந்தமாக கார் வாங்கிக் கொடுத்த போதிலும், தீபக் குடிபோதைக்கு அடிமையாகி சோனத்தின் நடத்தையில் சந்தேகப்படத் தொடங்கினார். சோனம் வேறு ஆண்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி தீபக் அடிக்கடி தகராறு செய்ததால், கடந்த ஒரு மாதமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

   

இந்நிலையில், சோனமின் தங்கை சங்கீதா வெளியூர் சென்றிருந்த ஒரு நாளில், சோனம் தனது மகனுடன் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த தீபக் அங்கு சென்றுள்ளார். மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்ததில், “யாரிடம் வீடியோ காலில் பேசுகிறாய்?” எனக் கேட்டு ஆத்திரமடைந்த தீபக், தனது மனைவியின் துப்பட்டாவாலேயே அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர், தானும் அதே அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

   

வெளியூர் சென்றிருந்த சங்கீதா வீடு திரும்பியபோது, அக்கா மற்றும் அத்தான் இருவரும் சடலமாக இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், சந்தேகத்தால் ஏற்பட்ட மோதலே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்பது முதற்கட்டமாகத் தெரியவந்துள்ளது. ஆறு வயது மகனைத் தவிக்க விட்டுவிட்டு தம்பதியினர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.