கொடூரத்தின் உச்சம்… “மனைவியுடன் உல்லாசம்.. இடைஞ்சலாக இருந்த பிஞ்சு குழந்தை”…. துடிக்கத் துடிக்கக் கொன்ற போதை தந்தை….!

By Nanthini on தை 27, 2026

Spread the love

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சரங்குளம் பகுதியைச் சேர்ந்த ஷிஜில் என்பவர், குடிபோதைக்கும் பல்வேறு தவறான பழக்கங்களுக்கும் அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இவர் மீது ஏற்கனவே பல காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜனவரி 16-ஆம் தேதி, மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஷிஜில், தனது மனைவி கிருஷ்ணபிரியாவை வற்புறுத்தி தனிமையில் இருந்துள்ளார். அப்போது அவர்களின் ஒரு வயது ஆண் குழந்தை பசியால் அழத் தொடங்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஷிஜில், “தனிமையில் இருக்கும்போது தொந்தரவு செய்கிறாயா?” எனக் கேட்டு, குழந்தையின் வயிற்றுப் பகுதியில் ஓங்கி மிதித்துள்ளார்.

தந்தையின் கொடூரமான தாக்குதலால் குழந்தை அந்த இடத்திலேயே மயக்கமடைந்தது. அதிர்ச்சியடைந்த தாய் கிருஷ்ணபிரியா, உடனடியாக குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். ஆனால், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். குழந்தையின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஷிஜில் குழந்தையைத் தாக்கியது உறுதி செய்யப்பட்டது.

   

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஷிஜில் தனது மனைவியுடன் தனிமையில் இருந்தபோது குழந்தை இடைஞ்சலாக இருந்ததால் ஆத்திரத்தில் குழந்தையைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, போலீசார் ஷிஜில் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரைத் தற்போது சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற குழந்தையையே தந்தை அடித்துக் கொலை செய்த இந்தச் சம்பவம் காஞ்சரங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.