அதிமுக ஊழல் கட்சியா…? விஜய்க்கு பதிலடி கொடுத்த தினகரன்…. மதுரையில் பரபரப்புப் பேட்டி…!

By Devi Ramu on தை 27, 2026

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறிய கருத்துகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் விளக்கமளித்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் தான் இணைய விரும்பியதாகச் செங்கோட்டையன் கூறியதை மறுத்த தினகரன், ஜெயலலிதா வழியில் வந்த தான் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே அந்தக் கூட்டணியில் இணைந்ததாகத் தெரிவித்தார்.

செங்கோட்டையன் தன்னை தவெக கூட்டணிக்கு அழைத்தபோது நட்பின் அடிப்படையில் ‘பார்த்துக்கொள்ளலாம்’ என்று மட்டுமே கூறியதாகவும், ஆனால் தனது இறுதி முடிவு அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணியே என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

   

அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சிக்கும் விஜய், அதே கட்சியில் அமைச்சராக இருந்த செங்கோட்டையனைத் தன் பக்கம் இழுத்துள்ளதைச் சுட்டிக்காட்டி அவர் விமர்சித்தார். மேலும், அதிமுக மூத்த நிர்வாகி வைத்தியலிங்கம் திமுகவில் இணைந்தது வருத்தமளிப்பதாகக் கூறிய அவர், பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது என்றார்.

   

தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பேசவில்லை என்றும், வரவிருக்கும் அமைச்சரவையில் தனது கட்சியினருக்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தினகரன் கூறினார்.