மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ஒன்பது வயது சிறுமி ஒருவரை அவரது தந்தையே மின்சார ரம்பத்தால் (Chainsaw) மிகக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தனது இரண்டாவது மனைவியின் மகளான அந்தச் சிறுமி மீது அதிகக் கோபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமி தனது மாற்றாந்தாய் சகோதரனின் பள்ளி மதிப்பெண் பட்டியலை (Marksheet) திருத்தியதே இந்தக் கொலைக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. சகோதரனின் மதிப்பெண்களைக் குறைத்து காட்டியதால் ஆத்திரமடைந்த தந்தை, சிறுமியைத் தண்டிப்பதாகக் கூறி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலுக்குப் பிறகு, குற்றவாளியான தந்தை தற்கொலைக்கு முயன்றார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸார், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
