தெலுங்கானாவில் நாகர் கர்னூல் மாவட்டத்தில் 36 வயது தந்தை தன்னுடைய மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்டண்டா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்ட போலீசார் அப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் இறந்த நபரின் எட்டு வயது மற்றும் 6 வயதுடைய இரண்டு மகள்கள், நான்கு வயது மகனாகியோரின் உடல்கள்.
பாதி எரிந்த நிலையில் அழுகிய நிலையில் கண்டெடுத்தனர். ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த அந்த நபர் குடும்ப பிரச்சினைகள் காரணமாக தன்னுடைய மனைவியுடன் சண்டை இட்டு கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் அங்கு வந்துள்ளார். முதல் கட்ட விசாரணையில் அவர் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் பெற்றோர் ஊற்றி எரித்துவிட்டு பிறகு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
