“அப்பா.. அப்பா…” சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே நெஞ்சைப் பிடித்து விழுந்த தந்தை… அலறி துடித்த மகள்… பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

By Devi Ramu on புரட்டாதி 7, 2026

Spread the love

தந்தை, தாய், சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோர் அடங்கிய குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த தந்தைக்குத் திடீரென இரண்டாவது முறையாகக் கடுமையான மாறடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கணப்பொழுதில் நிலைதடுமாறி, அப்படியே கீழே சுருண்டு விழுந்தார். இதை எதிர்பார்க்காத குடும்பத்தினர் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் உறைந்துபோயினர்.

அச்சமயத்தில், பயத்திலும் அதிர்ச்சியிலும் அந்த வீட்டின் மகள் அலறித் துடித்தபடி உடனடியாக மருத்துவமனை ஆம்புலன்ஸிற்கு போன் செய்தார். நிம்மதியாக உணவருந்திய நேரத்தில் நொடிப் பொழுதில் அரங்கேறிய இந்த நெஞ்சைப் பிளக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அவசரக் காலங்களில் முதலுதவியான சிபிஆர் செய்வது குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.