“இதயத்தை உலுக்கிய துயரம்!”… இறந்த பச்சிளம் குழந்தையை அட்டைப் பெட்டியில் எடுத்துச் சென்ற தந்தை… அதிர்ச்சி காரணம்….!

Spread the love

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், அரசு மருத்துவமனையில் இறந்த பச்சிளம் குழந்தையைத் தந்தை ஒருவர் அட்டைப் பெட்டியில் வைத்து எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பந்த்கான் பிளாக், பங்க்ராசாய் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா ஹெம்ப்ராம், தனது மனைவி ரீட்டா திரியாவைச் சக்ரதர்பூர் துணைப்பிரிவு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்திருந்தார். சனிக்கிழமை குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்த நிலையில், உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்க மறுத்துவிட்டதாகத் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவர்களின் அலட்சியமே குழந்தையின் இறப்பிற்குக் காரணம் என்றும், உடலை அகற்ற சுகாதார ஊழியர்கள் அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள சக்ரதர்பூர் துணைப்பிரிவு மருத்துவமனையின் பொறுப்பாளர் மருத்துவர் அன்ஷுமான் சர்மா, குழந்தையின் தந்தையோ அல்லது அவரது குடும்பத்தினரோ ஆம்புலன்ஸ் வசதி கேட்டு யாரிடமும் கோரிக்கை வைக்கவில்லை என்று கூறியுள்ளார். தாங்கள் அணுகியிருந்தால் நிச்சயம் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்திருப்போம் என்றும் அவர் தெரிவித்தார். இரு தரப்புக்கும் இடையே முரண்பட்ட கருத்துக்கள் நிலவும் நிலையில், உண்மை நிலையை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்துப் பேசிய சக்ரதர்பூர் துணைப்பிரிவு அதிகாரி ஸ்ருதி ராஜலட்சுமி, மாவட்ட நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். சிவில் சர்ஜன் பணியிடம் கடந்த எட்டு நாட்களாகக் காலியாக இருப்பது நிர்வாகச் சீர்கேட்டைக் காட்டுவதாகப் பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்கான அரசு மருத்துவ சேவைகளில் இத்தகைய அவலங்கள் இனி நடைபெறாமல் இருக்கவும், இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவும் முறையான விசாரணை மிகவும் அவசியமாகிறது.

Nanthini

Recent Posts

வெளியே சிரித்த முகம்… உள்ளே ரத்த வெறி… சமூக வலைதள பிரபலம் நிஷாவின் கொலையில் வெளியான பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…

15 minutes ago

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

26 minutes ago

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

43 minutes ago

அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…

56 minutes ago

பெங்களூர் காப்பகத்தில் பயங்கரம்… கழிப்பறையை கண்டாலே அலறும் 2 வயது குழந்தை… வீடியோவில் சிக்கிய கொடூரம்…!

பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…

1 மணத்தியாலம் ago

தவெக-வில் இருந்து வந்த செம ஆஃபர்…. அதிமுகவில் இருந்து விலகும் Ex அமைச்சர் வளர்மதி?…. சலசலப்பை அடக்கிய அப்சரா ரெட்டியின் ட்வீட்…!

முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…

1 மணத்தியாலம் ago