சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாகர்கர்னூல் மாவட்டம் சுக்காய்பள்ளியைச் சேர்ந்த தந்தை ரமேஷ் தன் மகள் மீது வைத்துள்ள பாசம் அனைவரின் இதயங்களையும் நெகிழ வைத்துள்ளது. 2024-ஆம் ஆண்டு மூளை சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு, தனது 13-வது வயதிலேயே உயிரிழந்த மகளின் நினைவாக அவர் ஒரு சிறிய கோயிலைக் கட்டியுள்ளார்.
சுமார் ரூ 2 லட்சம் செலவில் இந்த நினைவாலயத்தை எழுப்பியுள்ள ரமேஷ், தன் மகளின் நினைவுகள் என்றும் தங்களோடு நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் இதனை அமைத்துள்ளார். நாள்தோறும் அந்தச் சிறிய கோயிலில் தீபமேற்றி, சிறப்பு பூஜைகளையும் செய்து தன் மகளை இறைவனாக வழிபட்டு வருகிறார்.
https://twitter.com/muchatlu_/status/2104199870235934939/video/1
பெண் குழந்தைகள் தினத்தில் வெளிப்பட்டுள்ள இந்தத் தந்தையின் அளப்பரிய அன்பு, மகளின் பிரிவால் துடிக்கும் ஒரு தந்தையின் பாசத்திற்குச் சான்றாகவும், அப்பகுதியில் உள்ள அனைவரையும் கலங்க வைக்கும் ஒரு நிகழ்வாகவும் மாறியுள்ளது.
