உத்தரப் பிரதேச மாநிலம் இட்வா பகுதியைச் சேர்ந்த சிவாங்கி யாதவ், சமாஜ்வாடி கட்சியின் ஜஸ்வந்த்நகர் தலைவர் அசுதோஷ் டோனு யாதவ் என்பவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானதைத் தொடர்ந்து, அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியீட்டு விடுவதாகப் மிரட்டி, டோனு யாதவிடம் இருந்து சுமார் 1.76 கோடி ரூபாயை சிவாங்கி பறித்துள்ளார். இந்தப் பணத்தைக் கொண்டு அவர் சொகுசு மெர்சிடீஸ் கார் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டோனு யாதவ், சிவாங்கி மீது காவலர் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து அறிந்ததும் சிவாங்கி யாதவ் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், டோனு யாதவ் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ஒரு ரவுடி என்றும், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாகவும் கூறினார். இந்தத் திருப்புமுனையால் இந்த விவகாரம் அம்மாநில அரசியல் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது டோனு யாதவ், சிவாங்கிக்கு பணம் மாற்றப்பட்டதற்கான வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை காவல்துறையினரிடம் சமர்ப்பித்துள்ளார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் எடவா மாவட்டக் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. வழக்கின் உண்மைத்தன்மையை அறிய சிவாங்கியின் வங்கி கணக்குகள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
