உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகர் மாவட்டம், பிப்ராகாட் கிராமத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவரது மகள்களான லாலி (20) மற்றும் ஷீலா (18) ஆகிய இருவர், அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களைக் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்குத் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த இரு பெண்களும் கடந்த காலங்களில் மூன்று முறை வீட்டை விட்டு வெளியேறினர். ஒவ்வொரு முறையும் போலீசார் அவர்களை மீட்டு, காதலர்களுக்கே திருமணம் செய்து வைக்குமாறு அறிவுறுத்தியும் தந்தை கேட்கவில்லை. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நான்காவது முறையாக வீட்டை விட்டு ஓடிய மகள்களைத் தேடிக் கண்டுபிடித்த தந்தை, இனி காதலர்களுடன் பேசக் கூடாது என்று ஊர் பஞ்சாயத்து மூலம் அவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பஞ்சாயத்து எச்சரித்த போதிலும், இரு சகோதரிகளும் ரகசியமாகத் தங்களது காதலர்களுடன் பேசி வந்துள்ளனர். கடந்த ஜூன் 8 ஆம் தேதி நள்ளிரவில், லாலியும் ஷீலாவும் மொபைல் போனில் காதலர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை தந்தை ராம்பிரசாத் நேரில் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது மகன்களுடன் சேர்ந்து இரு மகள்களையும் ஒரு அறைக்குள் பூட்டி, கட்டைகளால் இரக்கமின்றி அடித்தே கொலை செய்துள்ளார். இக்கொடூர ஆணவக் கொலையைச் செய்துவிட்டு அவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் வர்மா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள தந்தை ராம்பிரசாத்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இக்கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது இரு சிறு வயது மகன்களையும் போலீசார் பிடித்துத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…