பகீர்… காதல் திருமணம் செய்த 24 வயது மகளை… அடித்துக் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர தந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்… உ . பி.- யில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 5, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து கொண்ட 24 வயது மகள் அங்கிதாவை, அவரது தந்தை விமல் சர்மா அடித்துக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை, தந்தை விமல் சர்மாவைக் கைது செய்துள்ளது. விசாரணையின் போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நான்கு மாதங்களுக்கு முன்பு, அங்கிதாவிற்கும் ITBP ராணுவ வீரரான அமித் பச்சோரிக்கும் குடும்ப எதிர்ப்பையும் மீறி நீதிமன்ற திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அமித் பணிக்குத் திரும்பியதால், அங்கிதா பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தார். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு விமல் சர்மா தனது மகளைத் தாக்கி, துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்றார். அப்போது வீட்டிலிருந்த மனைவி மற்றும் மகனை வெளியேறச் சொல்லிவிட்டு, அவர் சடலத்தின் அருகிலேயே அமர்ந்திருந்துள்ளார்.

   

அலறல் சத்தம் கேட்டு வந்த அண்டை வீட்டார் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிதா கழுத்தில் துப்பட்டா சுற்றப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். பலமுறை எடுத்துக்கூறியும் மகள் தனது திருமண உறவை முடிக்க மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே இக்கொலையைச் செய்ததாக விமல் சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.