“ஐயோ அப்பா வலிக்குது விட்ருங்க”… 4 வயது மகளுக்கு மாற்றான் தந்தை கொடுத்த நரக வேதனை… சென்னையை உலுக்கிய கொடூரம்….!

By Nanthini on மாசி 5, 2026

Spread the love

சென்னையில் நான்கு வயது சிறுமிக்கு அவரது மாற்றான் தந்தை காலில் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணலி புதுநகரைச் சேர்ந்த சகிலா என்பவரது மகன் திலீப் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், அவரது மனைவி பாண்டிச்சேரியைச் சேர்ந்த ராஜா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் தனது பேத்தியைப் பார்க்கச் சென்ற சகிலா, குழந்தையின் இடது காலில் ஆழமான தீக்காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, தனது இரண்டாவது அப்பா ராஜா சூடு வைத்ததாகவும், வெளியே கேட்டால் குக்கரில் சுட்டுக் கொண்டதாகச் சொல்லச் சொல்லி மிரட்டியதாகவும் அந்த பிஞ்சு குழந்தை கண்ணீருடன் உண்மையை உடைத்துள்ளது.

பேத்தி அனுபவித்த கொடுமையைக் கேட்டு ஆவேசமடைந்த பாட்டி, உடனடியாக ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் உதவி மையத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் எண்ணூர் மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். குழந்தையைப் பாதுகாப்பற்ற முறையில் நடத்தியது மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் ராஜாவைக் காவல் துறையினர் கைது செய்தனர். பெற்றோரின் கவனக்குறைவாலும், பாதுகாப்பற்ற சூழலாலும் ஒரு சிறுமி சித்ரவதைக்கு உள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.