நீயெல்லாம் ஒரு மனுஷனா?… பெற்ற மகளையே கற்பழித்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

By Nanthini on ஐப்பசி 8, 2025

Spread the love

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள கிராமத்தில் கர்நாடக மாநிலம் குடகு பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் 14 வயதில் ஒரு மகள் உள்ளார். இதனிடையே சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பே திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே மங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகிகள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது தனது தந்தை தான் தன்னை பலாத்காரம் செய்ததாக மாணவி கூறிய நிலையில் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த புகாரை தொடர்ந்து சிறுமியின் தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவே வீட்டுக்கு வந்த அவரை அந்தப் பகுதியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரித்த போது அந்த நபர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்ததும் பாஸ்போர்ட் எடுப்பதற்காகவே வீட்டுக்கு வந்ததும் தெரியவந்துள்ளது.

   

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே சிறுமியை பலாத்காரம் செய்தது அவர்தானா என்பதை கண்டுபிடிப்பதற்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்துவதற்கு போலீசார் திட்டமிட்டு உள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.