கடக ராசிக்குள் நுழையும் குருபகவான்…. ! 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கான்னு பாருங்க…!!

By Devi Ramu on ஐப்பசி 8, 2025

Spread the love

குரு பகவான் படிப்பு, ஞானம், அறிவு, திருமணம், தொழில், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர். வருகிற 18-ஆம் தேதி குரு பகவான் கடக ராசிக்குள் நுழையப் போகிறார். இதனால் கேந்திர திரிகோண ராஜ யோகம் உருவாகப் போகிறது. இந்த ராஜயோகத்தால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் பயன்பெறுவார்கள்.

கன்னி

   
  • எதிர்பாராத பல நன்மைகள் நடக்கும் .
  • பொருளாதார நிலையில் பெரிய மாற்றம் உண்டாகும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடைவதோடு, பதவி உயர்வுகள் சம்பள உயர்வுகள் கிடைக்கும்.
  • வியாபாரிகள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள்.
  • புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு.
  • ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மிதுனம்

   
  • அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிப்பதோடு அவர்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவார்கள்.
  • வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
  • பொருளாதார நிலைமை அதிகரிப்பதோடு, திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக அமையும்.
  • ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

துலாம்

 
  • பல நேர்மறையான மாற்றங்கள் நிகழும்.
  • பல்வேறு திட்டங்கள் சரியான நேரத்தில் முடிவடையும்.
  • வேலையில் புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலும் கடின உழைப்பு சிறந்த பலனை கொடுக்கும்.
  • தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.
  • வாழ்க்கை துணையுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள்.