தூக்க கலக்கத்தால் பயங்கரம்…! டிவைடரில் மோதி கார் கவிழ்ந்ததில் தந்தை, மகன் பலி… 3 பேர் படுகாயம்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 18, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்நகர் அருகே பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வேயில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். ஆசம்நகர் ஓஹ்னி கிராமத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநருக்குத் திடீரெனத் தூக்கம் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள டிவைடரில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஆசம்நகர் காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வாகன ஓட்டிகள் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது போதிய ஓய்வெடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.