“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு”…. அடுத்த கூட்டணி குறித்து அதிரடி காட்டிய தேமுதிக…. ஒரே போடாய் போட்ட பிரேமலதா….!

By Nanthini on ஐப்பசி 18, 2026

Spread the love

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி குறித்த கேள்விக்கு, அதைப் பற்றி தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், வாக்களித்த மக்கள்தான் அது குறித்துக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல்களில் அனைத்துக் கட்சிகளும் தங்களது வெற்றிக்காக உழைத்ததாகவும், “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தைக் முற்றிலுமாக ஒழித்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதே அனைவரின் முதன்மைக் கோரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அதுவே உண்மையான பொற்காலம் என்றும் வலியுறுத்தினார். மேலும், தற்போது திமுக கூட்டணியில்தான் அங்கம் வகிப்பதாகத் தெளிவுபடுத்திய அவர், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் இதே திமுக கூட்டணியுடன்தான் தேர்தலைச் சந்திப்போம் என்று உறுதியளித்தார்.