கார் கண்ணாடியை துளைத்த தோட்டாக்கள்…! நூலிழையில் உயிர் தப்பிய தந்தை மற்றும் 1 வயது மகள்… 3 கி.மீ துரத்தி சென்ற கும்பல்… பகீர் வீடியோ…!!

By Devi Ramu on கார்த்திகை 12, 2026

Spread the love

பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில் விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஃபாசில்கா அருகே உள்ள சுரேஷ்வாலா கிராமத்தைச் சேர்ந்தவர் மனீஷ் குமார். இவர் நகரத்திற்குச் சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு தனது 1 வயது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஸ்விஃப்ட் கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மனீஷ் குமாரின் காரை நிறுத்துமாறு கூச்சலிட்டுள்ளனர்.

   

ஆபத்தை உணர்ந்த மனீஷ் குமார் காரை நிறுத்தாமல் வேகமாகத் தனது கிராமத்தை நோக்கி ஓட்டியுள்ளார். ஆனால் விடாமல் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை துரத்தி வந்த அக்கும்பல், சுரேஷ்வாலா கிராமத்தில் உள்ள மனீஷ் குமாரின் வீட்டின் வாசலில் கார் நின்றதும் கீழே இறங்கி சரமாரியாக இரண்டு சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளது.

   

இதில் துப்பாக்கித் தோட்டாக்கள் காரின் முன்பக்கக் கண்ணாடி மற்றும் பக்கவாட்டுப் பகுதியில் துளைத்த போதிலும், மனீஷ் குமாரும் அவரது மகளும் அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி உயிர் தப்பினர். அங்கிருந்து காரை ஓட்டிச் சென்று தனது மாமா வீட்டில் தஞ்சமடைந்து அவர் உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். இக்கொடூரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சதர் ஃபாசில்கா காவல் நிலைய ஆய்வாளர் ஷிம்லா ராணி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.