இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகளையும், 8 T20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் மொத்தம் 120 போட்டிகளில் 134 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நிறைந்த இதயத்துடன், அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
