CM விஜய்க்கு ₹5,000 + ₹1 அனுப்பிய 360 விவசாயிகள்….. காலையிலேயே தமிழகத்தில் ஷாக்… சூடுபிடிக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்….!

By Nanthini on ஆனி 3, 2026

Spread the love

பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் அரசு அறிவித்த 5,000 ரூபாய் தள்ளுபடியால் தங்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை என்று கூறி, ஈரோட்டில் 360 விவசாயிகள் தங்களது அதிருப்தியை நூதன முறையில் வெளிப்படுத்தியுள்ளனர். முதல்வர் விஜய்க்கு 5,001 ரூபாயை (5,000 ரூபாய் + 1 ரூபாய்) திருப்பி அனுப்பி தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ள அவர்கள், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளின் முழுப் பயிர்க்கடனையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அரசின் இந்தத் அரைகுறைத் திட்டம் தங்களை ஏமாற்றும் செயலாக இருப்பதாகக் கூறி, தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முழுமையான கடன்தள்ளுபடி அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.