தமிழகத்தில் நவம்பர் 30ம் தேதி வரை காப்பீடு செய்ய கால நிர்ணயம் செய்யப்பட்ட பயிர்களை இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 2025-26 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் தமிழ்நாட்டில் குறுவை, சம்பா மற்றும் நபரை பருவத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசு கேட்டதற்கு இணங்க நடைபாண்டு குருவைப் பருவத்தில் இந்த திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாய பதிவு மூலமாக வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண் கட்டாயம் என்பதில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய பயிர் காப்பீட்டு வலைத்தளத்தில் சம்பா நெருப்பயிர் காப்பீடு செய்ய செப்டம்பர் முதல் நவம்பர் வரை கால நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தற்போது பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் டிச 1 ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இறுதி வாய்ப்பை விவசாயிகள் தவறவிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
