மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரிஷப் ராஜ்புத். இவர் சோனாலி சௌக்சே என்பவரை கடந்த 11 வருடங்களாக காதலித்து வந்தார்கள். சமீபத்தில் இவர்களின் திருமணம் நடந்துள்ளது அவர்களுடைய திருமண புகைப்படமானது சமூக ஊடகத்தில் வெளியான நிலையில் ராஜ் புத்தினுடைய நிறம் குறித்து பலரும் மோசமாக கேலி செய்துள்ளார்கள். கருப்பு நிறம் கொண்ட இவரை அந்த பெண் பணத்துக்காக திருமணம் செய்து கொண்டதாக சிலரும், சகோதரி உங்களுக்கு இது தேவையா? என்றும் கேள்வி கேட்டு உள்ளார்கள்.
மேலும் மாப்பிள்ளை அரசு வேலை செய்பவராக இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள். இப்போது பலரும் தங்களின் சொந்த வாழ்க்கையில் நடக்கும் முக்கிய தருணங்கள் எல்லாம் சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். பல பிரபலங்கள்தான் அப்படி என்றால் சாதாரண மக்களும் இப்படி பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால் வாழ்வின் முக்கியமான இனிமையான ஒரு நாள் இதுபோல கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவது சில நேரங்களில் நடந்து விடத்தான் செய்கிறது.
