கேரள மாநிலம் காசர்கோடு பரக்கலை பகுதியில் வசித்து வருபவர்தான் கோபி (58). இவருக்கு திருமணம் ஆகி இந்திரா என்ற மனைவியும் ரஞ்சேஷ் (34), ராகேஷ் (27) என்ற இரண்டு மகன்களும் இருந்தனர். இப்படியான நிலையில் நேற்று காலை முதல் அவர்களுடைய வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதனால் வீட்டிற்கு சென்று பார்த்த போது நான்கு பேரும் மயங்கிய நிலையில் கிடந்ததால் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து சென்று நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் கோபி, இந்திரா மற்றும் ரஞ்சேஷ் ஆகியோர் உயிரிழந்தது தெரிய வந்தது. உயிருக்கு போராடிய நிலையில் ராகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த துயர சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் முதல் கட்ட விசாரணையில் அதிகமான கடன் சுமையால் கோபி குடும்பத்தோடு ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
