ஒரே இரவில் மாறிய அரசாணை… கட்டணம் இருமடங்கு உயர்வு.. தமிழக அரசு அறிவித்தது…. காலையிலேயே ஷாக்….

By Nanthini on ஆனி 29, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள சுமார் 1,000 மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த மன்றங்களில் பெரும்பாலானவை மதுபானக் கூடங்களாக (FL2 / FL3 பார்கள்) செயல்பட்டு வரும் நிலையில், இந்த அதிரடி கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, சென்னையில் இதுவரை ரூ.15 லட்சமாக இருந்த கட்டணம் தற்போது ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இதர மாநகராட்சிகளில் ரூ.25 லட்சமாகவும், நகராட்சிப் பகுதிகளில் ரூ.15 லட்சமாகவும் இந்தக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி கட்டண உயர்வு, தமிழகத்தில் உள்ள மனமகிழ் மன்றங்களின் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.