சமூக ஊடகங்களில் அமைச்சர் சரத்குமார் போதை மாத்திரை பயன்படுத்தியதாகக் கூறி பரவி வரும் சர்ச்சை வீடியோ குறித்து, உளவுத்துறை விசாரணை நடத்த தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் சரத்குமார், தான் பயன்படுத்தியது குழந்தைக்கான சாதாரண மாத்திரைதான் என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த விளக்கத்தால் திருப்தியடையாத அரசுத் தரப்பு, அவரிடம் தனியாக விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், ஒருவேளை அந்த மாத்திரை சட்டவிரோதமானது என குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க முதல்வர் விஜய் தீர்க்கமான முடிவு எடுத்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
