“எதுக்கு திரிஷாவை இழுக்குறீங்க…?” எடப்பாடி பழனிசாமி பேச்சால் கொதிக்கும் ரசிகர்கள்…! பிரச்சாரத்தில் அதிரடி…!!

By Devi Ramu on சித்திரை 19, 2026

Spread the love

நடிகர் விஜய்யின் விவாகரத்து விவகாரத்தில் நடிகை திரிஷாவின் பெயர் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அது அரசியல் தேர்தல் பிரச்சாரக் களத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பரப்புரை செய்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த செங்கோட்டையனை விமர்சித்துப் பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் திரிஷாவின் பெயரைச் சொல்லி கிண்டல் செய்ய, அதற்கு இபிஎஸ் அளித்த ரியாக்ஷன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யுடன் திரிஷா அடிக்கடி ஜோடியாக வலம் வருவதால், அரசியல் மோதல்களுக்கு இடையே அவரது பெயர் தேவையற்ற முறையில் இழுக்கப்படுவதாகத் தெரிகிறது.

தன்னைப் பற்றி சமூக வலைதளங்களிலும் அரசியல் மேடைகளிலும் வெளியாகும் இதுபோன்ற அவதூறுகளுக்கு நடிகை திரிஷா மௌனம் காத்து வருகிறார். இருப்பினும், அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள், அரசியல் தலைவர்கள் தங்களின் தனிப்பட்ட பகையைத் தீர்த்துக் கொள்ளத் திரையுலகப் பெண்களைக் கேவலமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சி.வி.சண்முகம் போன்ற அரசியல்வாதிகள் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ள நிலையில், இபிஎஸ்-ஸின் இந்தப் பேச்சு திரிஷா ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.