தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தமிழ்நாட்டின் சிறந்த தலைவராகவும் இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் இன்றளவும் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கான தனி பாதையை உருவாக்கி அதன் வழி நடந்தவர் எம்ஜிஆர்.

குடும்ப வறுமையின் காரணமாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் பின்னால் நடிகராக உயர்ந்தார். இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். இவரது படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார் எம்ஜிஆர்.
தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர் வாரி வழங்கும் வள்ளல் அதேபோல் எம்ஜிஆருக்கு இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் அல்ல பக்தர்கள் இருந்தே சொல்லலாம். அதற்கு ஒரு சம்பவம் சான்றாக இருக்கிறது.
ஒருமுறை எம்ஜிஆர் அரசியலுக்கு வரவேண்டும் என்று முடிவு செய்து அறிவித்த பிறகு ரசிகர்களை சந்திக்க மதுரைக்கு வர வேண்டி இருந்தது. அப்போது ரயிலில் பயணம் செய்தார். ரயில் நாமக்கல்லை தாண்டியதுமே ரசிகர்கள் கூட்டம் அலை அலையாய் வர ஆரம்பித்தது. அதனால் ரயிலை வேகமாக இயக்க முடியவில்லை. எம்ஜிஆர் நான் காரில் செல்கிறேன் என்று சொல்லும்போது ரயிலில் இருந்த அதிகாரிகள் நீங்கள் இறங்கிவிட்டால் ரயில் தப்பாது ரசிகர்கள் உடைத்து விடுவார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

சரி என்று ரயிலயே எம்ஜிஆர் பயணித்தார். ஒரு மணி நேரத்தில் சென்றடைய கூடிய ரயிலை மதுரைக்கு 6 மணி நேரம் 20 கிலோமீட்டர் வேகத்தில் உருட்டி உருட்டி கொண்டு சென்றிருக்கின்றனர். அந்த அளவு ரசிகர் கூட்டம் அலைகடலாக எம்ஜிஆரை காண வந்திருந்தது. அதுவே அவரது பின்னாளின் அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்கவும் செய்தது.
