தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் ஒருபோதும் தீர்வாகாது என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருக்கும் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் நிலவும் தாமதத்தால் வேதனையடைந்த தூத்துக்குடி மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த கிளைச் செயலாளர் இசக்கியப்பன் (41), தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது அவரது குடும்பத்தினரையும் கட்சியினரையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் மீதான அன்பு என்பது ஆக்கப்பூர்வமான செயல்களாக வெளிப்பட வேண்டுமே தவிர, இதுபோன்ற விபரீத முடிவுகள் அன்பு செலுத்தும் தலைவருக்கும், அந்தத் தொண்டரை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கும் ஈடுகட்ட முடியாத இழப்பையே தரும் என்பதை உணர்ந்து, எத்தகைய சூழலிலும் தற்கொலை முயற்சியைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், அதிமுகவின் மூத்த தலைவர்களான…
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் போர்க்கொடி…
தமிழக சட்டசபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இது வெறும் சடங்காக மட்டுமில்லாமல், அரசியல் களம் தாண்டிய…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'குதிரை பேர' விவகாரத்தில், அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் சட்டப்பேரவையிலேயே தமிழக வெற்றி கழக…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குவதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த மக்கள்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவருக்குப் பேரிடியாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு…