தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி (87) காலமானார். தென்னிந்தியா சினிமாவின் ராணி என ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்டவர் இன்று இந்த மண்ணை விட்டு மறைந்துள்ளார். பெங்களூருவில் உள்ள வீட்டில் அவர் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
