திரைப்பட தயாரிப்பாளரை திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி…!!! வைரலாகும் திருமண  புகைப்படங்கள் …!!!

By Begam

Published on:

சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை மகாலட்சுமி .சன் டிவியில் ஒளிபரப்பான ‘அரசி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கால்பதித்தார் . யாமிருக்க பயமேன், செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில்  நடித்துள்ளார்.

   

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘தேவதையை கண்டேன்’ சீரியல் மூலம் இவர் பிரபலமானார். பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமி அணில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

தற்பொழுது மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவிந்தர் என்பவரை இரண்டாவதாக திருமணம் முடித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் மகாலட்சுமியுடன் மனக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் ரவீந்தர் .இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன .

author avatar