விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலை பார்க்க ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் சிறகடிக்க ஆசை சீரியலை பார்க்க ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் வெற்றி வசந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சீரியலுக்காக யாசகம் கேட்பவர் போல வேடம் போட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
கதையின்படி டாக்டர் பட்டம் வாங்குவதற்காக விஜயா பொய்யாக நிறைய விஷயங்களை செய்கிறார். அதனை முறியடிப்பதற்காக முத்து பிளான் போடுகிறார். சீரியலுக்காக வெற்றி வசந்த் யாசகம் கேட்பவர் போல வேடம் போட்டது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வெற்றி வசந்த் அடையாளம் தெரியாத அளவுக்கு கெட்டப் போட்டுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
