எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் முன்னேறியவர் KPY பாலா. இவர் முதல் முதலில் “கலக்கப்போவது யாரு?” என்ற நிகழ்ச்சியில் அறிமுகமானார். பின் பல நிகழ்ச்சிகளில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து, மிகவும் பிரபலமான “குக் வித் கோமாளி” என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தார். இது மட்டுமல்லாமல் தன்னிடம் உதவி என்று வருவோருக்கு, ஆம்புலன்ஸ் வாங்கி தருவது, நோயால் வாடுபவர்களுக்கு உதவுவது, தொழில் உதவி செய்வது போன்ற பல நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் என கிடைக்கும் வேலைகளை செய்து அதில் வரும் வருமானத்தில் மற்றவர்களுக்கு உதவி வருகிறார்.
ஆனால் அவர் உதவி செய்யும் விஷயத்தை ஒரு சிலர் தவறாக கூறி வருகிறார்கள். இதுகுறித்து ஏராளமான விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் ஆதவன் அளித்த பேட்டியில், “kpy பாலா நல்ல பையன், அவனுக்கு எதிராக வரும் வதந்திக்கு ஆதாரம் இல்லை. ஆனால் அவர் கொடுத்த ஆம்புலன்ஸ் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட வண்டி என புகார் வருது. ஆம்புலன்ஸ்களில் 1990, 2016 மாடல். பாலா பணம் கொடுத்து வாங்கி இன்னொருவருக்கு கொடுத்திருந்தால் இரண்டாவது ஓனர் பெயர் மாறி இருக்க வேண்டும். ஆனால் அப்படி மாறாமலேயே இருக்கிறது. இதற்கான ஆதாரத்தை வெளியிடனும் என்று கூறியுள்ளார்.
